தஞ்சாவூர் சாஸ்த்ரா - ஜெர்மனி பாஷ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தஞ்சாவூர் சாஸ்த்ரா - ஜெர்மனி பாஷ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

தஞ்சாவூர் சாஸ்த்ரா - ஜெர்மனி பாஷ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகமும், ஜெர்மனியின் பாஷ் சர்வதேச மென்பொருள் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தம் மூலம் இரு நிறுவனங்களும் கூட்டாக ஆராய்ச்சி செய்வது, மாதிரி பொருட்கள் உருவாக்குவது, ஆராய்ச்சிக்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவது ஆகியவற்றை செயல்படுத்த உள்ளதாக பாஷ் நிறுவனத்தின் மனிதவளத்துறை தலைவர் மோகன் பெல்லூர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தில் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.சந்திரமவுலி, பாஷ் நிறுவனத்தின் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்புப் பிரிவின் இயக்குநர் எஸ்.கமலநாதன் ஆகியோர் கையொப்பமிட்டனர். தொழில்நுட்ப ஆராய்ச்சி, திறன் பயிற்சி ஆகியவற்றை சிறப்பாகச் செய்து வரும் சாஸ்த்ராவை கமலநாதன் பாராட்டினார். முன்னதாக, ஆராய்ச்சி துறை முதன்மையர் ஜான் பாஸ்கோ பாலகுரு வரவேற்றார். இறுதியில், சாஸ்த்ராவின் பெருநிறுவன உறவுகள் துறை முதன்மையர் வெ.பத்ரிநாத் நன்றி கூறினார்.

Tags

Next Story