மலை அத்திப்பழங்கள் விளைச்சல் துவக்கம்

மலை அத்திப்பழங்கள் விளைச்சல் துவக்கம்

மலை அத்தி

கொடைக்கானலில் அதிக மருத்துவ குணம் கொண்ட மலை அத்திப்பழங்கள் விளைச்சல் துவங்கியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் மருத்துவம் குணம் கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் விளைவிக்கப்படுகிறது, இந்நிலையில் கொடைக்கானல் கீழ்மலை கிராமங்பளான அடுக்கம்,பேத்துப்பாறை, பெருமாள்மலை தாண்டிக்குடி,பண்ணைக்காடு,பாரதி அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களில் அதிக மருத்துவம் குணம் கொண்ட மலை அத்திப்பழம் விளைச்சல் தற்போது துவங்கியுள்ளது.

இந்த அத்திப்பழம் உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் ஒன்றாகும், அத்தி பழம் பெண்கள் உட்கொள்வதால் மாதவிடாய் காலங்களில் எதிர்ப்பு சக்திக்கு உதவும் வண்ணமாக இருப்பதாகவும் மார்பக புற்றுநோய் வருவதைத் தடுக்கும் விதமாகவும் அதே போல பெண்களுக்கு கர்ப்பம் காலங்களில் மிகவும் பயன்படும் எனவும் கூறப்படுகின்றது.

மேலும் இந்த பழங்களில் ஆரம்ப நிலையில் உள்ள காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும் எனவும் மலச்சிக்கல் தீரும் மேலும் ரத்த விருத்தி ஏற்பட்டு பித்தம் தணிக்கும் விதமாகவும் வெள்ளைப்படுதலை தடுக்கும் விதமாகவும் உள்ளது, அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது.

மேலும் சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றி சிறுநீரைப் பெருக்குகிறது. பெருங்குடலில் ஆங்காங்கே, இறுகிய கழிவுப் பொருட்களை பக்குவப்படுத்தி, இளக்கி, வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது எனவும் சொல்லப்படுகின்றது, தினசரி 2 பழங்களை உணவாக உட்கொள்ளும் போது உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும் உள்ளிட்ட மருத்துவ குணங்களை மலை அத்தி உள்ளடக்கியுள்ளது.

இதனையடுத்து மலை அத்திபழங்களை பழ வியாபாரிகள் 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து,சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு 1 கிலோ அத்தி பழங்கள் 300 ரூபாய் வரை விற்பனை செய்வதாக பழ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மருத்துவம் குணம் கொண்ட மலை அத்தி மரங்கள் மலைக்கிராமங்களில் மிகவும் அரிதாக மட்டும் தென்படுகிறது,இதனை தோட்டக்கலை துறையினர் கவனம் மலை அத்திபழங்களை அதிக அளவில் மலைக்கிராம விவசாயிகள் நடவு செய்வதற்கு அதற்குரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story