மலை மேலிட பயிற்சி அவசியம் !
ஊட்டியில் உள்ள பார்மசி கல்லூரியில் மூன்று நாள் தேசிய அளவிலான கருத்தரங்கு இன்று துவங்கியது. விழாவில், பேராசிரியர் ஆனந்தகுமார் வரவேற்றார். மைசூர் ஜே.எஸ்.எஸ்., கல்விக் குழும பொதுச் செயலாளர் பெட்ஸ்மார்த் தலைமை வகித்தார். வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி துணைத் தலைவர் சேகர் விஷ்வநாதன், ஜே.எஸ்.எஸ்., பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சுரேஷ், தற்போதைய துணை வேந்தர் சுரேந்திர் சிங் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாரளும் தற்போது கிரிக்கெட் நடுவராக செயல்பட்டு வரும் ஜவகல் ஸ்ரீநாத் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு பேசியதாவது, "எனக்கும் ஜே.எஸ்எஸ்., கல்லூரிக்கும் தொடர்பு உள்ளது. எனது பொறியியல் படிப்பை ஜே.எஸ்.எஸ்., பொறியியல் கல்லூரியில் முடித்தேன். மாணவர்கள் வாய்ப்பு வரும் என காத்திருக்காதீர்கள். வாய்ப்பை தேடி செல்லுங்கள். தற்போது மருந்தியல் துறை, உலக அளவில் பல்வேறு முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே மருந்தியல் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்," என்றார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, விளையாட்டுத்துறையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது. மேலும், சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது. சில நேரம் உடல் வலி காரணமாக தூக்க மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. விளையாட்டின் போது ஏற்படும் காயங்களுக்கு மருந்துகள் எடுத்துக் கொள்வது கட்டாயம் ஆகிறது. இதுபோன்று விளையாட்டு வீரர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளில் பக்க விளைவுகள் இல்லாத மருந்துகளை தயாரிக்க பார்மசித் துறை பெரும் பங்காற்றி வருகிறது. மலை மேலிட பயிற்சி மேற்கொள்வது விளையாட்டு வீரர்களுக்கு அவசியமாகிறது. ஜிம்பாபே உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மலைப் பிரதேசங்களைக் கொண்டது. இது போன்ற பகுதிகளுக்கு செல்லும் விளையாட்டு வீரர்கள் நீலகிரி மாவட்டத்தை போன்று மலைப் பிரதேசத்தில் மலை மேலிட பயிற்சி மேற்கொண்டால் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
ஊட்டியில் உள்ள பார்மசி கல்லூரியில் மூன்று நாள் தேசிய அளவிலான கருத்தரங்கு இன்று துவங்கியது. விழாவில், பேராசிரியர் ஆனந்தகுமார் வரவேற்றார். மைசூர் ஜே.எஸ்.எஸ்., கல்விக் குழும பொதுச் செயலாளர் பெட்ஸ்மார்த் தலைமை வகித்தார். வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி துணைத் தலைவர் சேகர் விஷ்வநாதன், ஜெ.எஸ்எஸ்., பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சுரேஷ், தற்போதைய துணை வேந்தர் சுரேந்திர் சிங் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு உரையாற்றினார். முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாரளும் தற்போது கிரிக்கெட் நடுவராக செயல்பட்டு வரும் ஜவகல் ஸ்ரீநாத் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு பேசியதாவது, "எனக்கும் ஜே.எஸ்எஸ்., கல்லூரிக்கும் தொடர்பு உள்ளது. எனது பொறியியல் படிப்பை ஜே.எஸ்எஸ்., பொறியியல் கல்லூரியில் முடித்தேன். மாணவர்கள் வாய்ப்பு வரும் என காத்திருக்காதீர்கள். வாய்ப்பை தேடி செல்லுங்கள். தற்போது மருந்தியல் துறை, உலக அளவில் பல்வேறு முன்னேற்றம் கண்டுள்ளது.எனவே மருந்தியல் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்," என்றார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, விளையாட்டுத்துறையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது. மேலும், சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது. சில நேரம் உடல் வலி காரணமாக தூக்க மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. விளையாட்டின் போது ஏற்படும் காயங்களுக்கு மருந்துகள் எடுத்துக் கொள்வது கட்டாயம் ஆகிறது. இதுபோன்று விளையாட்டு வீரர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளில் பக்க விளைவுகள் இல்லாத மருந்துகளை தயாரிக்க பார்மசித்துறை பெரும் பங்காற்றி வருகிறது. மலை மேலிட பயிற்சி மேற்கொள்வது விளையாட்டு வீரர்களுக்கு அவசியமாகிறது. ஜிம்பாவே உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மலைப் பிரதேசங்களைக் கொண்டது. இது போன்ற பகுதிகளுக்கு செல்லும் விளையாட்டு வீரர்கள் நீலகிரி மாவட்டத்தை போன்று மலைப்பிரதேசத்தில் மலை மேலிட பயிற்சி மேற்கொண்டால் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.