செல்போன் டவர் செயலிழப்பால் மலை கிராம மக்கள் பரிதவிப்பு

செல்போன் டவர் செயலிழப்பால் மலை கிராம மக்கள் பரிதவிப்பு

செல்போன் டவர் 

பத்துகாணி மலைப்பகுதியில் செல்போன் டவர் செயலிழப்பால் மலை கிராம மக்கள் பரிதவிப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் கடையால் பேரூராட்சிக்கு உட்பட்ட பத்துகாணிமலை பகுதியில், மக்களின் தொலை தொடர்பு வசதிக்காக பி.எஸ்.என்.எல் செல்போன் டவர் அமைக்கப்பட்டு உள்ளது. இப்பகுதியில் தொலைபேசி அலுவலகமும் செயல்பட்டு வந்தது. தற்போது பத்துகாணி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் தொலை தொடர்புக்கு பி.எஸ்.என்.எல் சேவை மட்டுமே உள்ளது. மலைப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடு கள் உள்ளன.பல்வேறு கிராம மக்கள் அவசர தேவைகள் உள்ளிட்ட தொலை தொடர்பிற்கு பயன்ப டுத்தும் ஒரே நிறுவனத்தின் செல்போன் டவர். அடிக்கடி பயனற்று போவது, மக்களை வேதனைக்கு உள்ளாக்குகிறது.மலைப் பகுதிகளில் மக்களுக்கு தேவையான அவசர உதவிகள் உடனடியாக கிடைப்பதில்லை. எந்த தேவையாக இருந்தாலும் செல்போன் மூலம் தான் வெளி ஊர்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டி உள்ளது. ஆம்புலன்ஸ் -தேவைக்கு கூட சில சமயங்களில் செல்போன் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு சம்பந் தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story