போலீசார் மீது நடவடிக்கை எடுக்க மலைவாழ் சங்கம் வலியுறுத்தல்

திருட்டு புகாரில் பழங்குடி சகோதர்களை அழைத்து சென்று தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்த இருப்பதாக மலைவாழ் மக்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தலைவாசல் அருகே இலுப்பநத்தத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி, 63, வீட்டில் மின்மோட்டார் திருடுபோனது. அவர் புகார்படி வீரகனுார் போலீசார் சந்தேகத்தின்பேரில், அதே ஊரை சேர்ந்த சகோதரர்களை, அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போது, 4 போலீசார் தாக்கியதாக கூறி, சகோதரர்கள், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.நேற்று, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலைவர் டில்லிபாபு தலைமையில், மா.கம்யூ.,தாலுகா செயலர் முருகேசன், மலைக்குறவன் சங்கத்தினர் உள்ளிட்ட நிர்வாகிகள், சகோதரர்களை பார்த்து ஆறுதல் 'தெரிவித்தனர்.தொடர்ந்து டில்லிபாபு நிருபர்களிடம் கூறுகையில், "எஸ்.ஐ., மைக்கேல் அந்தோணி உள்ளிட்ட, 4 போலீசார் தாக்கியுள்ளனர். அவர்கள் மீது டி.ஜி.பி., சேலம் டி.ஐ.ஜி., உள்ளிட்டோரிடம் புகார் அளிக்கப்படும். ஒருவாரத்தில் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை' எனில், மலைவாழ் மக்கள் சங்கம், மலைக்குறவன் சங்கத்தினர் இணைந்து, ஆத்தூர் ஆர்.டி.ஓ., அலுவலகம்முன் போராட்டம் நடத்துவோம் என்றார்.

Tags

Next Story