கறுஞ்சிறுத்தை நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்!
கறுஞ்சிறுத்தை நடமாட்டம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் ஒரே நேரத்தில் உலா வந்த சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. குறிப்பாக தற்போது நிலவும் வெயில் காலநிலையில் வனப்பகுதிகளில் வறட்சியான சூழல் ஏற்ப்பட்டு உள்ளது. இதனால் வனப்பகுதியில் வாழும் வனவிலங்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் ஊருக்குள் நுழையும் நிலை ஏற்பட்டு உள்ளது. அவ்வாறு வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் உலா வருவது தொடர்கதையாக இருந்து வரக்கூடிய நிலையில், நேற்றிரவு நேரத்தில் கோத்தகிரி அருகே உள்ள அரவேணு பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் ஒரே நேரத்தில் சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை உலா வந்துள்ளது. இந்த காட்சி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி., கேமராவில் பதிவான நிலையில், தற்போது குடியிருப்பு வாசிகள் இரவு நேரங்களில் குடியிருப்பில் இருந்து தங்களின் அத்தியாவசிய தேவைக்கு வீடுகளை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக வனத்துறையினர் அப்பகுதியில் நடமாடும் சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையினை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story