காட்டுயானைகள் நடமாட்டம்; வனத்துறை எச்சரிக்கை
வேப்பனப்பள்ளி அருகே கொங்கணப்பள்ளி வனப்பகுதியில் இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், கவனமாக இருக்கும்படி வனத்துறையினர் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
வேப்பனப்பள்ளி அருகே கொங்கணப்பள்ளி வனப்பகுதியில் இரண்டு காட்டு யானைகள் முகாம் பொது மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கணப்பள்ளி வனப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக இரண்டு காட்டு யானைகள் சுற்றித்திரிந்து வருகின்றன. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மகராஜகடை வனப்பகுதியில் இருந்து வந்த இரண்டு காட்டு யானைகள் கொங்கணப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டு இப்பகுதியில் உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் அந்த காட்டு யானைகளை வேறு வனப் பகுதிக்கு வரட்ட தமிழக வனத்துறையினர் வெவ்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் காட்டு யானைகள் வனப்பகுதிக்கு செல்லாமல் வனதுறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. இந்த நிலையில் இந்த இரண்டு காட்டி யானைகளையும் வளர்ப்பு வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து விரட்டும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டி வனப்பகுதியில் உள்ளதால் கிராமங்களில் விவசாயிகள் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் இந்த காட்டு யானைகளை வேறு வனப்பகுதி விரட்ட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.