தேருக்கு நகரும் கூண்டு - நிதி வழங்கிய தொழில் அதிபர்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட 14 திருத்தலங்களில் எட்டாவது ஸ்தலமான அருள்மிகு சினேகவல்லி தாயார் உடன்மர் ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது. கோவிலுக்கு சிறிய தேர் பெரிய தேர் என இரண்டு தேர்கள் உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக செய்யப்பட்ட தேர்களுக்கு கூண்டுகள் பழுதடைந்து இருப்பதால் தேர் சேதம் ஏற்படும் சூழ்நிலை இருந்தது. இதை அறிந்த சிலர் தொழிலதிபர்களை நாடினர்.
அதில் கோயமுத்தூரைச் சேர்ந்த சார்லஸ் மார்ட்டின் என்ற தொழில் அதிபர் இரண்டு தேர்களுக்கும் நகரக்கூடிய கூண்டு அமைக்கவும், சிறு சிறு மகாமரத்து பணிகள் செய்யவும் சுமார் 18 லட்சத்து ரூபாய்க்கு மேல் நன்கொடையாக வழங்கி அதற்கான பணிகள் துவங்க உள்ளது. அதனை சார்லஸ்மார்ட்டின் மேலாளர்கள் திவாகரன், தினகரன் மற்றும் மூத்த வழக்கறிஞர் சிவராமன். நாட்டார்கள் ஸ்தபதி சக்திவேல், மற்றும் கோவில் நிர்வாகத்தினர் உள்ளிட்டவர்கள் தேர் நிற்கும் இடங்களை வந்து பார்த்து வேலைகளை துவக்கி வைக்க நடவடிக்கை எடுத்தனர்.இந்த பணியானது வருகிற திருவிழாவிற்குள் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.