M.P. கே.ஆர்.என் ராஜேஷ்குமார் முன்னிலையில் அ.தி.மு.கவினர் தி.மு.கவில் இணைந்தனர்.

M.P. கே.ஆர்.என் ராஜேஷ்குமார் முன்னிலையில் அ.தி.மு.கவினர் தி.மு.கவில் இணைந்தனர்.
X
ராசிபுரம் ஒன்றியம் சந்திரசேகரபுரம் ஊராட்சி அதிமுக கிளை செயலாளர் பி.காமராஜ் மற்றும் வார்டு உறுப்பினர் ஆர்.சந்திர ஆகியோர் தலைமையில் அ.தி.மு.கவிலிருந்து விலகி தி.மு.கவில் இன்று இணைந்தனர்.
இராசிபுரம் ஒன்றியம், சந்திரசேகரபுரம் ஊராட்சி அதிமுக கிளை செயலாளர் பி.காமராஜ் மற்றும் வார்டு உறுப்பினர் ஆர்.சந்திரா ஆகியோர் தலைமையில் அதிமுகவிலிருந்து விலகி நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி., முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியானது ஒன்றிய குழு தலைவரும் ஒன்றிய கழக செயலாளருமான கேபி.ஜெகநாதன் முன்னிலையில் மாவட்ட பொருளாளர் ஏகே.பாலசந்தர், ஒன்றிய கழக செயலாளர்கள் கேபி.இராமசுவாமி, அசோக்குமார், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சத்யசீலன், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் சிவக்குமார்,முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் மணிமாறன், ஒன்றிய பொருளாளர் முத்துசெல்வம், முன்னிள் ஊராட்சி செயலாளரா முருகேசன், சார்பு அணி துணை அமைப்பாளர் பன்னீர் செல்வம், கண்ணன், முகேஸ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story