கல்லூரி மாணவிகளுக்கு எம்பி அட்வைஸ்

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடந்த உலக மகளிர் தின விழாவில், சமூக நலன் குறித்து மாணவிகளுக்கு எம்பி., அறிவுறுத்தி பேசினார்.

நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் உமா தலைமை தாங்கினார். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் இராமலிங்கம் முன்னிலை வகித்தார். பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு குறும்படத்தினை வெளியிட்டு, விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

விழாவில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார் எம்பி கலந்து கொண்டு அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துக்கொண்டு பேசுகையில்... பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் தான் முதல் உறவு என்றும் அதற்கு பிறகு தான் எல்லாமே எனவும் மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தான் பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை பெற்றுத்தந்தார் அவர் வழியில் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி பதவிகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் வழங்கி உள்ளார்.தற்போது வேலைவாய்ப்பிலும் பெண்களுக்கு 33 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளன .

பெண் குழந்தைகள் பெற்ற தாய் , தந்தையினருக்கு நல்ல குழந்தையாக இருக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு நல்ல மாணவனாக இருந்திட வேண்டும். பெண்கள் நன்றாக படித்து, அறிவு பெற்று, விழிப்புணர்வு பெற்றால் அவர்களின் குடும்பம் மட்டுமல்லாமல், சமுதாயம், நாடும், தழைத்தொங்கும் என்பதில் ஐயமில்லை என்றார். இதனைத்தொடர்ந்து 11 பேருக்கு தாலிக்கு தங்கமும், 30 பேருக்கு தையல் மிஷின் இயந்திரம், 60 தொழில் முனைவோருக்கு விருதுகளையும் வழங்கினார். பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்பட்ட தபால் கணக்கு புத்தகங்களை வெளியிட்டார். காரிகை குறும்பட தயாரிப்பில் பங்கேற்ற 20 நபர்களுக்கு விருதுகள் வழங்கினார் .

இந்த விழாவில் நாமக்கல் எம்.எல்.ஏ ராமலிங்கம், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) க.மோகனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் சி.சசிகலா, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் மா.கோவிந்தராசு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவியர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags

Next Story