புதுப்பாளையத்தில் தடையற்ற மும்முனை மின்சார உற்பத்தி தொடங்கி வைத்த எம்பி
செய்தியாளர்களை சந்தித்த எம்பி
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சி, ரங்கசாமி திருமண மண்டபத்தில் (16.03.2024) தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் / நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில் இராசிபுரம், புதுப்பாளையம் பகுதி பொதுமக்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையான புதுப்பாளையம் 22 கி.வோ பீடரை கிராமபுற வகைபாட்டில் இருந்து நகர்புற வகைபாடாக தரம் உயர்த்தி 24 மணி நேரமும் தொடர்ந்து சீரான தடையற்ற மும்முனை மின்சார விநியோகத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் / நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்ததாவது : தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, நாமக்கல் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள்.
அந்த வகையில் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழுர், மேலூர், கெடமலை ஆகிய கிராமங்களில் வசித்து வரும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த சாலை அமைக்கும் பணிக்கு ரூ.139.654 கோடி மதிப்பில் 31.07 கி.மீட்டருக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா காலத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4,000/-வழங்கியது, விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, மகளிருக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத்திட்டம், உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப்பெண் திட்டம்,
மகளிருக்கு பேருந்துகளில் இலவச விடியல் பயணம், அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பசியினை போக்கிட காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். தேர்தல் முடிந்த பிறகு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகட்டி தரப்படவுள்ளது.
இராசிபுரம் வட்டம், இரா.புதுப்பாளையம், கட்டணாச்சம்பட்டி, கல்லாங்குளம், சானார்புதூர், பனங்காட்டூர், அத்திபலகானூர், களரம்பள்ளி, புதூர், மலையாம்பட்டி, பட்டணம், கைலாசம்பாளையம், பட்டணம், முனியப்பம்பாளையம், கருப்பனார் கோவில், வடுகம், மேலூர், கீழூர் உள்ளிட்ட கிராமங்கள் புதுப்பாளையம் மின்சார பாதைக்குட்பட்டது.
இப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் விவசாயிகள் அதேபோன்று தொழில் செய்பவர்களுடைய நீண்ட நாட்கள் கோரிக்கையாக 24 மணி நேரமும் வழங்கப்படாமல் இருந்தது. புதுப்பாளையம் மின்சார பாதைக்கு இருக்கக்கூடிய கிராமங்கள் அதிகமாக விவசாயிகளைக் கொண்டு இருக்கிறது. அதிகமாக தொழில்துறை இருக்கிறார்கள். குறிப்பாக கீழூர், மேலூர் பகுதிகளில் பழங்குடியினர் மக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள்.
இவர்களுடைய நீண்ட நாள் கோரிக்கை புதுப்பாளையம் மின்சார பாதை பீடரை 24 மணி நேரம் மும்முனை மின்சார பாதையாகவும், கிராம வாகைபாட்டில் இருந்து நகர்புற வகைப்பாட்டிற்கு மாற்ற வேண்டும் என்பதாகும். இக்கோரிக்கை நீண்ட நாட்களாக இந்த பகுதியுடைய மக்கள் அரசாங்கத்திற்கு முன்வைத்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மின்சாரத் துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர் மின்சார வாரிய உயர் அதிகாரிகள் என அனைவர்களுடைய முயற்சியினால் இன்றையதினம் புதுப்பாளையம் மின்சார பாதை மும்முனை மின்சார பாதை ஊரக மின்சார பாதையில் இருந்து நகர்ப்புற மின்சார பாதியாகவும் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
மேலும், வீட்டு மின் இணைப்பு, கைத்தறி மின் இணைப்பு, அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், கோயில்கள், பஞ்சாயத்து மின் இணைப்பு உள்ளிட்ட மின் இணைப்பு வகைப்பாடுகள் என 6,954 மின் இணைப்புகளும், 2,028 விவசாய மின் இணைப்புகளும், சாதாரண ஏழை மக்களுடைய குடிசை மின் இணைப்புகள் 731 மின் இணைப்புகள் மூலம் ஏறத்தாழ 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதனால் பயனடைவார்கள்.
கிராமப்புற வகைபாட்டிலிருந்து நகர்புற வகைப்பாட்டிற்கு உயர்த்துவதன் மூலம் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். இத்திட்டத்தினை செயல்படுத்திட சீரிய முயற்சிகள் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களுக்கும், மின்சாரத் துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும், மின்சார துறை அலுவலர்கள் என அனைவருக்கும் இப்பகுதி மக்களின் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் / நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவத்தார். இந்நிகழ்ச்சியில் இராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.பி.ஜெகநாதன், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.எம்.துரைசாமி, பட்டணம் பேரூராட்சி துணைத் தலைவர் பொன்.நல்லதம்பி, மின்சார வாரிய செயற்பொறியாளர் சபநாயகம், உதவி செயற்பொறியாளர்கள் மோகன்ராஜ், கிஷோர்குமார், உள்ளாட்சி பிரதிநிதகள், துறை சார்ந்த அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கலந்து கொண்டனர்.