நாமக்கல் புறவழிச்சாலையில் இரயில்வே மேம்பால கட்டுமான பணிக்கு விரைந்து அனுமதி வழங்கிட இரயில்வே வாரிய தலைவரிடம் இராஜேஸ்குமார் எம்பி கோரிக்கை !

நாமக்கல் புறவழிச்சாலையில் இரயில்வே மேம்பால கட்டுமான பணிக்கு விரைந்து அனுமதி வழங்கிட இரயில்வே வாரிய தலைவரிடம் இராஜேஸ்குமார் எம்பி கோரிக்கை !
X

MP Irajeskumar 

நாமக்கல் நகருக்கு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த திராவிட மாடல் ஆட்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்கள் புறவழிச்சாலை அமைக்க ரூ.194 கோடி ஒதுக்கீடு செய்தார்கள். அதன்படி நாமக்கல்லுக்கு புறவழிச்சாலை அமைக்கின்ற கட்டுமான பணி நடைப்பெற்று வருகிறது.இப்பணியானது நான்கு கட்டங்களாக நடைபெறும். இதில் முதல் மூன்று கட்டங்களுக்கு திருச்சி சாலை வரை புறவழிச்சாலை அமைப்பதற்கு பணிகள் விரைந்து நடைப்பெற்று வருகின்றது.

இப்பணியின் இரண்டாவது கட்டத்தில் இருக்கின்ற இரயில்வே பாதையை கடக்க இரயில்வே மேம்பாலத்தை அமைக்க இந்திய இரயில்வே துறையின் அனுமதி கோரப்பட்டுள்ளது.இந்த அனுமதியை விரைந்து வழங்கிட வேண்டும் என இன்று புதுடெல்லியில் இரயில்வே துறை தலைவர் சதிஸ்குமார் - Chairman and Chief Executive Officer (CEO) of the Indian Railway Board அவர்களை நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கேஆர்என். இராஜேஸ் குமார் அவர்கள் சந்தித்து வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் இரயில்வே மேம்பால கட்டுமான பணி நடைபெற விரைவாக அனுமதி வழங்கப்படும் என இரயில்வே துறை தலைவர் அவர்கள் தெரிவித்தாா்.

Tags

Next Story