மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - எம்பி ஜோதிமணி ஆய்வு

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - எம்பி ஜோதிமணி ஆய்வு

மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஆய்வு செய்தார் எம்பி ஜோதிமணி

சணப்பிரட்டியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தை கரூர் எம் பி ஜோதிமணி ஆய்வு செய்தார்
மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஆய்வு செய்த எம் பி ஜோதிமணி. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சணப்பிரெட்டி பகுதியில் உள்ள சமுதாயக்கூடத்தில், இன்று "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் அரசின் 10- துறைகளை சேர்ந்த அதிகாரிகள் முகாமிட்டு அப்பகுதி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்த முகாமை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மக்களிடம் பெறப்படும் மனுக்களில் குறைபாடுகள் ஏதேனும் காணப்பட்டால் அதனை சீர் செய்து எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என மனுதாரர்களுக்கு விளக்கம் அளித்ததோடு, அதிகாரியிடம் அந்த மனுக்களை எவ்வாறு கையாள வேண்டும் எனவும் விளக்கம் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி 3-வது மண்டல தலைவர் கோல்ட் ஸ்பாட் ராஜா, கரூர் மாநகராட்சி நகர் நல அலுவலர் லட்ஷயவர்னா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story