வெள்ள நிவாரண தொகை கனிமொழி எம்பி வழங்கல்

வெள்ள நிவாரண தொகை கனிமொழி எம்பி வழங்கல்

நிவாரண நிதி வழங்கிய எம்பி

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பாதிப்பு வெள்ள நிவாரண தொகை 6ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியை கனிமொழி எம்பி துவங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 18 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்தது பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் 6 ஆயிரம் ரூபாய் குடும்ப அட்டைக்கு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார். மேலும் 215-கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று முதல் நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிவாரண தொகை வழங்கும் பணிகளை தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் உள்ள நியாய விலக்கடையில் வைத்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்பி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளரிடம் பேசும்போது மிக அதிக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளான தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம்,

ஏரல், காயல்பட்டினம் போன்ற பகுதிகளில் 508நியாய விலை கடைகள் மூலம் 3லட்சத்து 23ஆயிரத்து 108குடும்ப அட்டைகளுக்கு 6ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையும். அதைபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் மிக குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளான ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், கயத்தார்,பகுதிகளில் உள்ள சுமார் 449நியாய விலை கடைகள் மூலம் சுமார் 2லட்சத்து 14ஆயிரத்து 717குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு அறிவித்த 1000-ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story