ரூ.12 லட்சத்தில் குடிநீர் மேல்நிலை  தொட்டிக்கு எம்.பி  அடிக்கல்  நாட்டல்

ரூ.12 லட்சத்தில் குடிநீர் மேல்நிலை  தொட்டிக்கு எம்.பி  அடிக்கல்  நாட்டல்
குடிநீர் மேல்நிலை தொட்டிக்கு அடிக்கல் நாட்டிய எம்.பி
பீமாநகரில் ஊராட்சியில் ரூ.12 லட்சத்தில் குடிநீர் மேல்நிலை  தொட்டிக்கு எம்.பி  அடிக்கல்  நாட்டினார்.

கன்னியாகுமரி மாவட்டம் பீமநகரி ஊராட்சிக்கு உட்பட்ட சிஎம்சி நகர் பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அவர்கள் கோரிக்கை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு செய்யப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி பூமி பூஜையுடன் நடைபெற்றது.

குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் தோவாளை காங்கிரஸ் வட்டார தலைவர் முருகானந்தம், ஊராட்சி தலைவர் தசந்தியா சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story