இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஒற்றுமையுடன் உள்ளனர் என எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஒற்றுமையுடன் உள்ளனர் என எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி
இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஒற்றுமையுடன் உள்ளனர் என எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை மிக அதிகமாக இருக்கிறது என்பதும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வில்லை என்பதை எதிர்ப்பு காட்டுகின்ற விதத்தில் 5 இளைஞர் கள் நாடாளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசி போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வாக்குமூலம் அளித்து உள்ளதாக தெரிவித்தார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற நிகழ்வு என்பதை மத்திய அரசு தொடர்ந்த இதனை மூடி மறைப்பதற்கான திட்டங்களை செய்து வருகிறது என குற்றம் சாட்டினார்.

இந்த 5 இளைஞர் களுக்கும் அனுமதி சீட்டு வழங்கிய பாஜக எம்.பியின் செயலையும் மத்திய அரசு மூடி மறைக்க தொடர்ந்து மத்திய அரசு முயல்கிறது என்றார். மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீச்சு விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவைக்கு வந்து அறிக்கை கேட்டதற்கு 13 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்து இருப்பது என்பது ஜனநாயக விரோதம் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடுவோம் என்றார். மேலும் இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் எனவும் வரும் திங்கட்கிழமை அனைவரும் மீண்டும் சந்திக்க இருக்கிறார்கள் என்றார்.

இந்தியா கூட்டணியில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்திற்கு வந்து பதில் தரும் வரை தொடர் போராட்டம் தொடரும் என்றார். மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் எம்.பி வரும் 19ஆம் தேதி இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்களின் 4வது கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது என்றார். இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட அனைத்து தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர் என்றார். இந்தியா கூட்டணியை பொறுத்த வரையில் பலமான கூட்டணியாக உள்ளது.

மூன்று மாநில தேர்தல் தோல்வி குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்து உள்ளது என்றார். மேலும் இந்தியா கூட்டணியை பொறுத்தவரை ஒற்றுமையாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். பாராளுமன்றத்திற்குள் புகை உமிழும் குண்டுகளை வீசிய நபர்களுக்கு பாஸ் வழங்கிய நபர் காங்கிரஸ் எம் பி அல்லது காங்கிரஸ் கட்சியின் கூட்டணி எம் பி வழங்கி இருந்தால் அவர்களை சிறையில் அடைத்து இருப்பார்கள் பாஜக எம்பி கொடுத்ததன் காரணத்தினால் அவர்களை விசாரணைக்கு கூட டெல்லி காவல்துறையினர் அழைக்கவில்லை பாஜக அரசு இரட்டை வேஷம் போடுவதாகவும் உள்துறை அமைச்சரிடம் விளக்கம் கேட்டதற்கு எம்பிகளை டிஸ்மிஸ் செய்திருப்பதாகவும் பாஜக தொடர்ந்து ஜனநாயகத்தை கொலை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்துடன் செயல்படுவதால் ஒருவர் சொல்வதை அனைவரும் கேட்க வேண்டும் என்ற நிலை இல்லை சர்வாதிகாரிகள் கட்சியில் ஒருவர் சொல்வதை அனைவரும் கேட்பார்கள்.

Tags

Next Story