ஐஜேகே மாவட்ட இளைஞரணி துணை செயலாளரை சந்தித்த எம்பி
ஆசிவழங்கிய எம்பி
பெரம்பலூர் மாவட்ட ஐ ஜே கே மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சுகுமார் - மாலதி திருமண விழா அண்மையில் . நடைபெற்றது .இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சா. குடிக்காடு கிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு பெரம்பலூர் எம்.பியும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனருமான டாக் டர் பாரிவேந்தர் நேரில் வருகை தந்து மணமக்களை ஆசிர்வாதம் செய்து வாழ்த்தினார்.
மேலும் உறவினர்களுடன், புகைப்படம் எடுத்து கொண்டனர். தொடர்ந்து சிறுவர் சிறுமிகள் டாக்டர் பாரிவேந்தருடன் உற்சாகமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். முன்னதாக டாக்டர் பாரிவேந்தர் அவர்களுக்கு மணமக்கள் குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து, பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்வில் இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், பார்க்கவ குல முன்னேற்ற சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.