குமரியில்  சாலை விபத்து தடுக்க  நடவடிக்கை எடுக்க எம்.பி மனு

குமரியில்  சாலை விபத்து தடுக்க  நடவடிக்கை எடுக்க எம்.பி மனு

நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குமரியில்  சாலை விபத்துக்களை தடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தார்.


நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குமரியில்  சாலை விபத்துக்களை தடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இந்த சந்திப்பின் போது கன்னியாகுமரி மாவட்டத்தின் அடிப்படை தேவைகளான சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீர் செய்து தர வேண்டும், பல்வேறு இடங்களில் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சாலை தடுப்புகள் மூலமாக ஏற்படும் விபத்துக்களால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு வருகின்றது ஆகவே சாலை தடுப்புகளினால் ஏற்படும் விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார் மேலும் மீனவ கிராம மக்களின் கோரிக்கைகளையும் முன் வைத்தார். கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட மடத்து பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு ஏழை குடும்பங்கள் வீடுகள் கட்டி அதற்கான வரியும் செலுத்தி வசித்து வருகிறார்கள். இவர்கள் வசிக்கும் பகுதி தவறுதலாக மடம் சொத்து என்று அறிவிக்கப்பட்டது அகவே இங்கு வசித்து வரும் குடும்பங்களை இந்த நிலத்தில் தொடர்ந்து குடியிருக்க அனுமதிக்க வேண்டுமெனவும், அவர்களை சொத்து வரி செலுத்த அனுமதிக்க வேண்டும். என மனுவில் கூறியுள்ளார்.

Tags

Next Story