நலதிட்ட உதவிகள் வழங்கிய எம்பி

நாமக்கல்லில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் 264 பயனாளிகளுக்கு ரூ. 39.98 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகராட்சி, ஸ்ரீ குமரவேல் திருமண மண்டபத்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, ஆகியோர் தலைமையில் பசலி 1433 வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 264 பயனாளிகளுக்கு ரூ.39.98 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் விழாவில் தெரிவித்ததாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். அரசுப்பள்ளியில் பயிலும் மாணவியர்கள் உயர்கல்வி பயில மாதம் ரூ.1000/- வழங்கும் புதுமைப்பெண் திட்டம், அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவுத்திட்டம், மகளிருக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம், மகளிருக்கு பேருந்துகளில் இலவச விடியல் பயணம் என பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், மாணவர்களும் உயர் கல்வி பயில மாதம் ரூ.1,000/- வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை விரைவில் அறிவிக்க உள்ளார்கள். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் ஏழை, எளிய மக்களுக்கு சுமார் 14,500 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான போதை மலைக்கு ரூ.140.00 கோடி மதிப்பீட்டில் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.53.39 கோடி மதிப்பீட்டில் இராசிபுரம் பகுதியைச் சேர்ந்த அணைபாளையத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், வெண்ணந்தூர் பகுதியில் சுமார் 700 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கடை கோடி மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மக்களை சென்றடையும் வகையில் அனைவரும் பணியாற்றி வருகின்றனர்.

எனவே, பொதுமக்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி 11.6.2024 முதல் 21.6.2024 வரை நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் இராசிபுரம் வட்டத்திற்குட்ட பகுதிகளுக்கு இராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுவின் அடிப்படையில் 264 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. பசலி 1433 வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் அடிப்படையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 2 பயனாளிகளுக்கு தலா ரூ.2.00 இலட்சம் நிவாரண நிதி, சமூக பாதுகாப்புத் திட்டத்துறை சார்யில் 15 குடும்பங்களுக்கு தலா ரூ.3.00 இலட்சம், இயற்கை மரண உதவி தொகை,4 பயனாளிகளுக்கு தலா ரூ.4,000/- திருமண உதவித்தொகை, 6 பயனாளிகளுக்கு தலா ரூ.7,200/- தற்காலிக ஓய்வூதியம், 3 திருநங்கைகளுக்கு தலா ரூ.54,000/- உதவித்தொகை, வருவாய்த்துறை சார்பில் 34 பயனாளிகளுக்கு ரூ.33.32 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, 103 பயனாளிகளுக்கு உட்பிரிவற்ற பட்டா மாறுதல் ஆணை, 58 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல் ஆணை, 19 பயனாளிகளுக்கு இணைவழிச்சான்றிதழ்கள், நில அளவைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு புல எல்லை அத்து காட்டுதல் ஆணை, 13 பயனாளிகளுக்கு விளக்கி பதிவு செய்தல் ஆணை, வழங்கல் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை என மொத்தம் 264 பயனாளிகளுக்கு ரூ. 39.98 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் இராசிபுரம் நகர்மன்றத் தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், இராசிபுரம் வட்டாட்சியர் சு.சரவணன், ராசிபுரம் நகர செயலாளர் என்.ஆர்.சங்கர், ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.துரைசாமி, உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story