அணுமின் நிலைய திட்ட இயக்குனரிடம் எம்பி கோரிக்கை

அணுமின் நிலைய திட்ட இயக்குனரிடம் எம்பி கோரிக்கை

எம்.பி.ஞான திரவியம்

கூடங்குளம் அணுமின் நிலைய வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனத் திட்ட இயக்குனரிடம் எம்.பி ஞான திரவியம் கோரிக்கை விடுத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த கூடங்குளம் அணுமின் நிலைய வேலைவாய்ப்பில் உள்ளூர் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு முன்னுரிமை வழங்க வேண்டும் என அணுமின் திட்ட இயக்குனரிடம் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் நேற்று (மார்ச் 2) கோரிக்கையை முன் வைத்தார். இந்த கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுப்பதாக அணுமின் திட்ட இயக்குனர் எம்பி ஞான திரவியத்திடம் வாக்குறுதி அளித்துள்ளார்.

Tags

Next Story