குலசேகரத்தில் உரக்கிடங்கை திறந்து வைத்த எம்பி விஜய்வசந்த்
உரகிடங்கை திறந்து வைத்த எம்பி
குலசேகரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு ரூபாய் 15 லட்சம் மதிப்பில் உறக்கிடங்கை எம். பி திறந்து வைத்தார்
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உர கிட்டங்கி கட்டுவதற்கு ரூபாய் 15 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவு பெற்று இன்று அதனை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் திருமதி ஜெயந்தி ஜேம்ஸ், காங்கிரஸ் கமிட்டியின் வட்டாரத் தலைவர் திரு வினுட் ராய், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் திரு ரத்தின குமார், கூட்டுறவு சங்க தலைவர் திரு. மோகன் தாஸ், நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story