திரு.வி.க நகர் பொதுமக்களை அலறவிடும் சாரைப் பாம்பு
எட்டிப்பார்க்கும் சாரைபாம்பு
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியான திரு.வி.க. நகர் 2வது வீதியில் தொடரும் பாம்புகள் தொல்லையால் அங்குள்ள பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த சில தினங்களாக அங்குள்ள காலியிடங்கள் மற்றும் முற்புதர்களில் உள்ள எலிப் பொந்துகளில் பாம்புகள் தஞ்சமடைந்து அவ்வபோது வெளியில் வந்து பொதுமக்களை பயமுறுத்தி வருகிறது. மேலும் இங்கு உள்ள ஒரு பொந்தில் மஞ்சள் சாரை என சொல்லப்படும் சாரைப்பாம்பு வகையை சேர்ந்த பாம்பு வெகு நாட்களாக இங்கு பதுங்கியுள்ளது.
இப்பகுதியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதுடைய பொதுமக்களும் இங்கு சொந்த வீடுகளிலும், வாடகைக்கும் வாழ்ந்து வருகின்றனர். எனவே இந்த ஜந்துக்கள் இரவு நேரங்களில் வீட்டிற்குள் வந்துவிடுமோ எனவும், எதிர்பாராத விதமாக யாரையாவது கடித்து விடுமோ எனவும் மிகுந்த அச்சமடைந்தள்ளனர்.
மேலும் யாருக்கும் பிடிபடாத இந்த பாம்புகளை உடனடியாக பிடிக்க வேண்டும் என இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.