எம்.எஸ்., ஜூவல்லர்ஸ் ஷோரூம் திறப்பு விழா

எம்.எஸ்., ஜூவல்லர்ஸ் ஷோரூம் திறப்பு விழா

ஷோரூம் திறப்பு விழா

எம்.எஸ்., ஜூவல்லர்ஸ் ஷோரூம் திறப்பு விழா
திருக்கோவிலுார் , வடக்கு வீதியில் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப 60 ஆண்டு கால பாரம்பரிய எம்.எஸ்., நகைக் கடை விரிவுபடுத்தப்பட்டது. இதன் திறப்பு விழாவில் நிர்வாகி விஜயராஜ் வரவேற்றார். நிறுவனர் கோத்தம்சந்த் தலைமை தாங்கி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திருக்கோவிலுார் நகராட்சி சேர்மன் முருகன் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். திறப்பு விழாவை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு சிறப்பு விற்பனை நடக்கிறது. நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் கார்த்திகேயன், முரளி, இந்திய கம்யூ., மாநில நிர்வாகி சரவணன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தங்கம், தி.மு.க., நகர அவை தலைவர் குணா, அரகண்டநல்லுார் பேரூராட்சி தலைவர் அன்பு, திருக்கோவிலுார் முன்னாள் பேரூராட்சித் தலைவர் விநாயகமூர்த்தி, அரிமா சங்கத் தலைவர் செந்தில்குமார், சாசன தலைவர் வாசன், கட்டுமான காண்ட்ராக்டர் கிருஷ்ணன், வழக்கறிஞர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் அருண், அபிஷேக், அரவிந்த், ஆகாஷ் அனைவருக்கும் நன்றி கூறினர்.

Tags

Next Story