ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் முக்கனி திருவிழா

மதுரை அருகே திருநகரில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் முக்கனி திருவிழா இன்று நடைபெற்றது.

மதுரை அருகே திருநகரில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் முக்கனி திருவிழா இன்று நடைபெற்றது. மதுரை அருகே திருநகர் பகுதியில் அருள்மிகு உச்சி கருப்பணசாமி திருக்கோயில் 250 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு மக்கள் வழிபடுவதாக சொல்லப்படுகிறது. ஒரு சிறிய பாறை மீது சந்தனம் குங்குமம் வைத்து மாலை அணிவித்து வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் ஆண்கள் மட்டும் வழிபடுவது இத்திருக்கோயிலில் வழக்கம். இக்கோயில் உள்ளே பெண்களுக்கு அனுமதி இல்லை. இந்தக் கோவிலில் உச்சி கருப்பணசாமிக்கு மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் என முக்கனிகள் கொண்ட கனி திருவிழா நடைபெற்றது.

பின்னர் கோவிலுக்கு வரும் ஆண்களுக்கு மட்டும் பழங்களை அங்கேயே சாப்பிட்டு செல்ல வேண்டும். மேலும் திருநீரு முதல் பிரசாதம் வரை எதுவும் இத்திருக்கோவிலில் இருந்து வெளியே கொண்டு செல்லக் கூடாது என்ற ஒரு வினோதமான பழக்கவழக்கம் இன்றுவரை உண்டு இன்று நூற்றுக்கணக்கான ஆண்கள் மட்டும் பங்கேற்று உச்சி கருப்பணசாமிக்கு மதியம் மணிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் முக்கணிகளை வைத்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து அந்த முக்கனிகளும் கோயிலுக்கு வந்திருந்த ஆண்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு சாப்பிட்டு சென்றனர்.

Tags

Next Story