முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்டி மறுகால் -நேரில் பார்வையிட்ட மேயர்

முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்டி மறுகால் -நேரில் பார்வையிட்ட மேயர்

முக்கடல் அணையை பார்வையிட்ட மேயர்

முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்டி மறுகாலில் பாய்கிறது, இதை மாநகராட்சி மேயர் மகேஷ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகர மக்களின் குடிநீர் ஆதாரமாக திகழுவது முக்கடல் அணையாகும். இந்த அணை இந்த வருடம் தண்ணீர் தரைமட்டத்துக்கு போனதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டனர். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் முதல் மழை பெய்ய தொடங்கியது. அதிலும் தற்போதைய கன மழையால் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதில் முக்கடல் அணை முழுவதும் நிரம்பியுள்ளது. 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணை நீர்மட்டம் நேற்று முழு கொள்ளளவை எட்டியது. அதே சமயம் தொடர் மழை பொழிவு காரணமாக அணைக்கு வினாடிக்கு 12 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அணை நிரம்பி விட்டதால் அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கனஅடி தண்ணீர் மறுகால் பாய்கிறது. இதை மாநகராட்சி மேயர் மகேஷ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன் உள்பட பலர் இருந்தனர். முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்டியதால் நாகர்கோவில் மாநகர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story