முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


கும்பாபிஷேக விழா


முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

தென்காசி மாவட்டம் முக்கூடலில் அமைந்துள்ள முத்துமாலையம்மன் கோவில் மிகவும் பிரசித்தி வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலில் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிசேகம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் 4ம் கால யாக சாலை பூஜை, வேத பாராயணம், திரவ்யாஹ{தி, மகா பூர்ணா ஹ{தி, யாத்ரா தானம், கடம்புறப்பாடு ஆகியன நடைபெற்றது.

தொடர்ந்து செங்கோல் ஆதீனம் 18வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவபிரகாச தேசிக சத்திய ஞான பரமாசாரிய சுவாமிகள் அருளாசியுடன் முத்துமாலையம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிசேகம் நடைபெற்றது. பின்னர் மகா அபிசேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை, சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இவ்விழாவில் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ. சிவபத்மநாதன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஆலங்குளம் யூனியன் சேர்மன் எம். திவ்யா மணிகண்டன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முக்கூடல் இந்து நாடார் சமுதாய தலைவர் பொன்னரசு, செயலாளர் மகேஷ்வரன், பொருளாளர் விஜயசேகர், நிர்வாக அதிகாரிகள் இளங்குமரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags

Next Story