புதுக்கோட்டை அருகே விடிய விடிய நடைபெற்ற முளைப்பாரி திருவிழா

புதுக்கோட்டை அருகே விடிய விடிய நடைபெற்ற  முளைப்பாரி திருவிழா

முளைப்பாரி ஊர்வலம் 

புதுக்கோட்டை அருகே வைகாசி திருவிழாவை முன்னிட்டு விடிய விடிய முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் காவிரி நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வருடம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம் அவ்வகையில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு இந்த ஆலயத்தில் பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பாக வைகாசி விழா முன்னிட்டு நூற்றுக்கணக்கான பெண்கள் கும்மியடித்து அம்மன் பாடல்களை பாடினார்கள்.

பின்னர் 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி உடன் காவிரி நகர் வீதியில் வழியே அங்குள்ள ரயில்வே நிலையத்தை அடைந்தனர் பின்னர் அங்கு அம்மன் பாடல்கள் பாடப்பட்டு வாகனத்தில் அம்மனின் உற்சவர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அங்கிருந்து முளைப்பாரி தொடங்கியது இந்த முளைப்பாரி எனது நேற்று இரவு எட்டு மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 3 மணி வரை நடைபெற்றது.

பின்னர் பெண்கள் முளைப்பாரி வைத்து குலவை சத்தமிட்டனர் இதனை எடுத்து ஸ்ரீ முத்துமாரியம்மன் தீபாரதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அவ்வூர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story