ஊர் ஒற்றுமைக்காகவும் மழை பெய்து விவசாயம் தழைக்க வேண்டி‌ முளைப்பாரி!

பக்தி ஊர் ஒற்றுமைக்காகவும் மழை பெய்து விவசாயம் தழைக்க வேண்டி‌ முளைப்பாரி!
திருமயம் அருகே மருங்கூரில் ஊர் ஒற்றுமைக்காகவும் மழை பெய்து விவசாயம் தழைக்க வேண்டி‌ முளைப்பாரி எடுத்தும்,கும்மியடித்தும் முத்துமாரியம்மனை வழிபட்ட பெண்கள் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அரசம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மருங்கூரில் ஊர்‌ ஒற்றுமைக்காவும்,மழை பெய்து விவசாயம் தழைக்க வேண்டியும் பாரம்பரிய முறைப்படி கும்மியடித்தும்,முளைப்பாரி,கரகம் எடுத்தும் முத்துமாரி அம்மனை வழிபடுவது வழக்கம். அதேபோல் 63-வது ஆண்டாக இந்த வருடமும் அவரவர் வீடுகளில் பொங்கல் வைத்து வழிபட்டவுடன்,பெண்கள் கரகம் மற்றும் முளைப்பாரி‌ எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து, பிள்ளையார் ஊரணியில் கரகம் மற்றும் முளைப்பாரிகளை விட்டனர்.தொடர்ந்து பெண்கள் கும்மியடித்து முத்துமாரியம்மனை வழிபட்டனர்.இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story