பங்குனி திருவிழாவினை முன்னிட்டு முளைப்பாரி உற்சவம்

பங்குனி திருவிழாவினை முன்னிட்டு முளைப்பாரி உற்சவம்

சிவகங்கை அருகே முத்துமாரி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடந்த முளைப்பாரி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சிவகங்கை அருகே முத்துமாரி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடந்த முளைப்பாரி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சிவகங்கை அருகே அல்லூர் பனங்காடி சாலையில் உள்ள கோது தனலெட்சுமி நகரில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் 8ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் முளைப்பாரி உற்சவ விழாவானது கடந்த 26-ம் தேதி கணபதி பூஜையுடன் காப்பு கட்டப்பட்டு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் தினந்தோறும் முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி உற்சவ திருவிழா இன்று நடைபெற்றது. இந்த முளைப்பாரி திருவிழாவில் திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து கும்மி நடனமிட்டு நீர்நிலைகளில் கரைத்து முளைப்பாரி திருவிழாவினை கொண்டாடினர்

Tags

Next Story