மூலங்குடி தேனிக்கண்மாயில் மீன்பிடித்திருவிழா!
மீன்பிடித்திருவிழா
மூலங்குடி தேனிக்கண்மாயில் மீன்பிடித்திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி தேனிக்கண்மாயில் மீன்பிடித்திருவிழா நடைபெற்றது. பொன்னமராவதி வட்டாரத்தில் கோடை காலத்தில் விவசாய கண்மாய்களில் நீர் மட்டம் குறைந்த நிலையில், மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி சாதி மத பேதமின்றி மீன்பிடித் திருவிழா நடைபெறும். அதன்படி மூலங்குடி தேனிக்கண்மாயில் ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசத் தொடங்கிய மீன்பிடித் திருவிழாவில் சுற்றுவட்டாரக் கிராம மக்கள், வலை, பரி, கச்சா, ஊத்தா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் கண்மாயில் இறங்கி, கெண்டை, கெளுத்தி, அயிரை, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்வகைகளை ஆர்வமுடன் பிடித்துச்சென்றனர்.
Next Story