ஆலங்குடி அருகே முளைப்பாரி எடுப்பு திருவிழா

ஆலங்குடி அருகே முளைப்பாரி எடுப்பு திருவிழா

முளைப்பாரி ஊர்வலம் 

ஆலங்குடி அருகே மழை பெய்து வேளாண்மை செழிக்க வேண்டி கரக மற்றும் முளைப்பாரி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த கோயிலின் திருவிழா அடுத்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது.

இன்று சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி,சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்கள் கரகம் எடுப்பு மற்றும் முளைப்பாரி எடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

குறிப்பாக திருநங்கைகள் கடந்த ஒன்பது தினங்களாக விரதம் இருந்து வந்து முளைப்பாரி பயிரிட்டு கரகத்திற்கு அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கல்லாலங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலிலிருந்து கரக மற்றும் முளைப்பாரி எடுத்துச் சென்ற ஆயிரக்கணக்கான பெண்கள் மேளதாளங்கள் முழங்க கும்மியடித்தும் குலவையிட்டும் முளைப்பாரியை தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் முன்பாக வைத்து வழிபாடு நடத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

இந்த ஆண்டு நல்ல மழை பெய்து வேளாண்மை செழிக்க வேண்டிய நோய்நொடியின்றி மக்கள் வாழவும் நடைபெற்ற இந்த முளைப்பாரி எடுப்பு திருவிழாவில் 1000 மேற்பட்ட பெண்கள் தலையில் முளைப்பாரியை சுமந்தவாறு ஊர்வலமாக வந்த காட்சி காண்பவரே கவர்ந்தது.

Tags

Next Story