ஏலச்சீட்டு நடத்தி பல கோடி மோசடி

ஏலச்சீட்டு மோசடி

ஏலச்சீட்டு மோசடி
வாணியம்பாடி அருகே ஏலச்சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த சையத் பாஷா இவர் வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கடந்த சில ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.. இந்நிலையில் சையத் பாஷா பொதுமக்கள் கட்டிய ஏலச்சீட்டு பணம் பல கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டு திடீரென பணத்துடன் தலைமறைவாகியுள்ளார். உடனடியாக இதனை அறிந்த சையத் பாஷாவிடம் ஏலச்சீட்டு பணம் கட்டிய பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் சையத் பாஷாவை கைது செய்து தங்களது பணத்தை மீட்டு தரக்கோரி வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் ஏலச்சீட்டு நடந்தி பணத்துடன் மாயமான சையத்பாஷாவை வலை வீசி தேடி வருகின்றனர்.
Tags
Next Story


