மின் கட்டணம் பல மடங்கு உயர்வு: கூலித்தொழிலாளிகள் வேதனை

மின் கட்டணம் பல மடங்கு உயர்வு: கூலித்தொழிலாளிகள் வேதனை

கோப்பு படம்

தூத்துக்குடி லேபர் காலணியில் பல மடங்கு மின் கட்டணம் உயர்வு மின் கட்டணத்தை குறைக்க தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தூத்துக்குடி துறைமுகத்திற்கு சொந்தமான லேபர் காலனி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு எங்குமே இல்லாத வகையில் ஒரு யூனிட் மின்சார உபயோகத்திற்கு 14 ரூபாய் 50 காசு மின் கட்டணம் மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்துவதால் கூலி தொழிலாளர்களாளன தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் எனவே அரசு மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை தூத்துக்குடி மாநகராட்சி அறுபதாவது வார்டு பகுதியில் அமைந்துள்ளது.

லேபர் காலனி தூத்துக்குடி வ உ சி துறைமுகத்திற்கு சொந்தமான இடத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்த லேபர் காலணியில் வசிப்பவர்கள் அனைவருமே கூலி தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருவார்கள்.

இந்நிலையில் பல ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் தவித்து வந்த இவர்களுக்கு துறைமுக நிர்வாகம் சார்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக மின் இணைப்பு வழங்கப்பட்டது.

இந்த மின் இணைப்பு வழங்கப்பட்ட பின்பு லேபர் காலனி பகுதியில் குடியிருப்பவர்கள் மின் கட்டணமாக தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் இல்லாத வகையில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 14.50 காசு என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு கட்டணத்தை அதற்கான தனியாக ஒரு புதிய துறைமுகம் லேபர் காலனி குடியிருப்போர் நலச்சங்கம் என்ற அமைப்பு மூலம் மாதம் மாதம் மின்கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக மாதம் 500 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மின் கட்டணமாக செலுத்த வேண்டி உள்ளது இதனால் கூலி தொழிலாளர்களான தங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்களிடம் புகார் அளித்தும் தங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என லேபர் காலனி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் கொரோனா காலத்தில் தங்களது மின் கட்டணத்தை ஒரு யூனிட் எட்டு ரூபாய் 50 காசுக்காக குறைக்க நடவடிக்கை எடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கூறிச் சென்றனர் ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனவே தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருப்பது போன்று 100 யூனிட் பயன்படுத்துவதற்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தங்களுக்கு அவ்வாறு இல்லாமல் ஒரு யூனிட் பயன்படுத்த 4.50 காசு வரையிலான குறைந்த கட்டணத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Read MoreRead Less
Next Story