பன்முக கலாச்சார போட்டிகள்

பன்முக கலாச்சார போட்டிகள்

 கெங்கவல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு, வட்டார அளவிலான பன்முக கலாச்சார போட்டிகள் நடந்தன. 

கெங்கவல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு, வட்டார அளவிலான பன்முக கலாச்சார போட்டிகள் நடந்தன.

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிகளில், மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு, கெங்கவல்லி வட்டார அளவில் பன்முக கலாச்சார போட்டிகள், ஒன்றிய அலுவலகத்தில் நடத்தப்பட்டது.

விழாவிற்கு ஒன்றிய ஆணையாளர்கள் சந்திரசேகரன், தாமரைச்செல்வி தலைமை வகித்தனர். மகளிர் திட்டவட்டார இயக்க மேலாளர் கீதா முன்னிலை வகித்தார். இதில் கோலம், கபடி, கயிறு இழுத்தல், குழு பாடல், குழு நாடகம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. பெண்ணுக்கான திருமண வயது. பாலியல் தொல்லை, பெண்ணுக்கு எதிரான சட்டம்; பாதுகாப்பு குறித்து மகளிர் சுய உதவிகுழு பெண்கள் கோலமாக வரைந்தனர். இதில் முதல் பரிசு ஒதியத்தூர் ஊராட் சிக்கும், 2ம் பரிசு ஆணையாம்பட்டிக்கும், பரிசு கடம்பூருக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் வாசுகி, புஷ்பா, கனி மொழி மற்றும் 14 ஊராட்சிகளைச் சேர்ந்த 100க்கு மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story