அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் மாணவர்களுக்கு பன்மொழி திறன் பயிற்சி

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் மாணவர்களுக்கு பன்மொழி திறன் பயிற்சி
X
சான்றிதழ்களுடன் மாணவர்கள் 
சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் இலவசமாக பன்மொழி திறன் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது

சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:- இன்றைய சூழலில் கல்வி படிக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்பு கனவானது வெளிநாடுகளையும், வெளிமாநிலங்களையும் பெரிதும் சார்ந்துள்ளது. மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை மட்டும் பெற்றுதராமல் அவர்களின் பன்மொழி திறனை மேம்படுத்துவதும் அவசியமானது.

இதன்படி, எங்கள் கல்லூரியில் படிக்கம் மாணவர்களுக்கு இந்தி, ஜெர்மன், ஜப்பானிய மொழிகளுடன் இணைந்து சரளமாக ஆங்கிலம் போன்றவையும் எழுதுதல், படித்தல் போன்ற திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக துறையை சேர்ந்த சுமார் 50 மாணவ, மாணவிகள் பேசுவதற்காக இந்தியை படித்து வாணி விகாஷ் இந்தி தேர்வை சிறப்பாக முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர் என்றார்.

தொடர்ந்து மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரியில் நடந்தது. இதில், துறை டீன் செந்தில்குமார் தலைமை தாங்கி மாணவர்களுக்கு சான்றிதழை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்த துறை விரிவுரையாளர் ஆயிஷாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story