நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகளை பின்பற்றிய பேரூராட்சி நிர்வாகம்

நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகளை பின்பற்றிய பேரூராட்சி நிர்வாகம்

நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகளை பின்பற்றிய பேரூராட்சி நிர்வாகம்

நாடாளுமன்றத் தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்றி சங்ககிரி பேரூராட்சி நிர்வாகம் அனைத்து கட்சி கொடிக்கம்பங்களையும் அகற்றியது.

நாடு முழுவதும் 2024 ஆம் ஆண்டுக்கான 18 வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் தேதியினை நேற்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலான நிலையில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி சேலம் மாவட்டம் சங்ககிரியில் சாலையோரமாக வைக்கப்பட்டிருக்கும் அனைத்து கட்சி கொடி கம்பங்களும், கொடிகளையும் அகற்றும் பணியில் பேரூராட்சி சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பறக்கும் படை அதிகாரிகளும் நகர முதல் கிராமப் பகுதிகள் வரையிலும் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story