ஆத்தூரில் மின்விளக்குகள் பொருத்திய நகராட்சி நிர்வாகம்

ஆத்தூரில் மின்விளக்குகள் பொருத்திய நகராட்சி நிர்வாகம்

மின்விளக்கு பொருத்தும் பணியில் ஊழியர்கள்

நீண்ட நாட்களாக எறியாமல் இருந்த ஆத்தூர் நகராட்சி மின் கம்பங்களின் மின்விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆத்தூர் நகரப் பகுதியில் நகராட்சி அலுவலகம். ராணிப்பேட்டை, பகுதிகளில் சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் எரியாமல் நீண்ட நாட்களாக இருண்ட நிலையில் இருந்து வந்தது இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வின் எதிரொலியாக அனைத்து மின்விளக்குகளும் தற்போது சீரமைக்கும் பணியில் நகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story