வெப்பத்தை தணிக்கும் பொருட்டு ORS கரைசல் வழங்கிய நகராட்சி நிர்வாகம்

X
வெப்பத்தை தணிக்கும் பொருட்டு ORS கரைசல் வழங்கிய நகராட்சி நிர்வாகம்
திருச்சி மாவட்டம், லால்குடி பேருந்து நிறுத்தத்தில் கோடைகால வெப்பத்தை தணிக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு ORS கரைசல் வழங்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சி பேருந்து நிலையத்தில் கோடைகால வெப்பத்தை தணிக்கும் பொருட்டு ORSகரைசல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையர் வை.குமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உப்பு மற்றும் சர்க்கரை கரைசலை வழங்கினார். வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் ஆர்வமுடன் உப்பு மட்டும் சர்க்கரை கரைசலை வாங்கி பருகினார். இதில் லால்குடி நகராட்சி பொறியாளர் வெங்கட்ராமன், துப்புரவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி , சுகாதார ஆய்வாளர்கள் லட்சுமணன் மற்றும் சுரேஷ் மற்றும் நகராட்சி அலுவலர்கள், டெங்கு பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
