சேறு கழிவுகளை அகற்றிய பேரூராட்சி நிர்வாகம்

சேறு கழிவுகளை அகற்றிய பேரூராட்சி நிர்வாகம்

திருச்சி மாவட்டம் அருகே அக்ரஹாரத்தில் மழையால் ஏற்பட்டட சேறு கழிவுகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது.


திருச்சி மாவட்டம் அருகே அக்ரஹாரத்தில் மழையால் ஏற்பட்டட சேறு கழிவுகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ளமேல அக்ரஹாரத்தில் மழையினால் ஏற்ப்பட்ட இன்னல்களை சமூக வலைதளம் மூலமாக பேரூராட்சி நிர்வாகத்திற்க்கு அப்பகுதி மக்கள் கோரிக்கையாக தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை மண்ணச்சநல்லூர் பேரூராட்சி நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் உடனடியாக தேங்கி இருந்த சேறு கழிவுகளை அகற்றியும் ப்ளீச்சிங் பவுடர் அடித்தும் கொசுப்புழுவை கொல்லும் கழிவு நீர் கால்வாயில் மருந்து தெளித்தும் மாலையில் கொசு புகை மருந்து அடித்தும் பணிகளை பார்வையிட்டு திறம்பட செய்தனர். பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி கொடுத்த பேரூராட்சி மன்றத் தலைவர் துணைத் தலைவர் அனைத்து மன்ற உறுப்பினர்களுக்கும் குறிப்பாக செயல் அலுவலர், பேரூராட்சி தூய்மைப்பணி ஆய்வாளர் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பொதுமக்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் மழையினால் மேல அக்ரஹாரம் பாதிக்கக்கூடிய பகுதியாகும். எனவே எங்கள் பகுதியினை சிறப்பு கவனம் செலுத்தி இதேபோன்று பொது சுகாதார பணியினை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொண்டனர்.

Tags

Next Story