நகராட்சி தூய்மை பணியாளர் குறைதீர் முகாம்

தாராபுரம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களாக பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. தூய்மை பணியாளர்களுக்கு குறை தீர்ப்பு முகாம் தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன் தலைமையிலும் நகர மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்த முகாமில் தூய்மை பணியாளர்களுக்கு பிஎப் தொகை வழங்கப்படாமல் உள்ள தூய்மை பணியாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது மேலும் நகரமன்ற தலைவர் பாப்பு கண்ணன் பேசுவதில் தாராபுரம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மாதம் சம்பளம் சரியாக வரவில்லை என்றால் தன்னை அணுகி கேட்கலாம் எனவும் மேலும் அனைத்து தூய்மை பணியாளர்களும் கட்டாயமாக கையுறை இணைந்து தான் தூய்மை பணிகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் தற்போது கோடை காலம் என்பதால் தேங்கி கிடக்கும் குப்பைகளில் இருந்து விஷ ஜந்துக்கள் கடிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது இதனால் குப்பைகளை அள்ளும்போது தூய்மை பணியாளர்கள் கட்டாயமாக கையுறை அணிந்துதான் சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். தூய்மை பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்து அந்த குறைகளுக்கு கேட்டறிந்து பாதுகாப்பான முறையில் பணிபுரிய வேண்டும் என ஆலோசனையை வழங்கினர். இக்கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர் மணிகண்டன், பாண்டி, செந்தில், ஆர் கே எம் நிறுவனம் மேலாளர் விக்னேஷ் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story