பேருந்து நிலைய கட்டுமானப்பணியை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

பேருந்து நிலைய கட்டுமானப்பணியை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

பேருந்து நிலைய கட்டுமானப்பணியை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

திருப்பூர் கோவில் வழியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார்ஜிகிரியப்பனவர் 3-வது மண்டலத்திற்குட்பட்ட கோவில் வழி பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு தளங்களில் 42 பேருந்து நிறுத்தும், 35 கடைகள்,550 இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், ஒரு உணவகம், ஒரு தாய்மார்கள் பாலூட்டும் அறை, மூன்று மின் தூக்கிகள், கழிப்பிடவசதி, குடிநீர் வசதி,காவல்துறை மற்றும் அலுவலருக்கான அறை, கண்காணிப்பு அறை மற்றும் தகவல் மையம் போன்ற வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் தலைமை பொறியாளர் லட்சுமணன், உதவி ஆணையாளர் வினோத்,துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம், உதவி பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

Tags

Next Story