குடிநீர் விநியோகம் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு

திண்டுக்கல், மரியநாதபுரத்தில் குடிநீர் விநியோகம் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. நகர் பகுதியில் பொதுமக்கள் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தினந்தோறும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திலிருந்து 160 லட்சம் லிட்டர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து 70 லட்சம் லிட்டர் தண்ணீர் என 230 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் 413 சிறு மின் விசைப்பம்ப், 152 அடிகுழாய் மற்றும் 22 ஆழ்துளை கிணறு ஆகியவை மூலம் பொதுமக்களின் வெளிப்புற பயன்பாட்டிற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடை காலத்தை முன்னிட்டு குடிநீர் விநியோக பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 33 மற்றும் 35 ஆகிய வார்டுகளில் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் செயல்படாமல் உள்ள பவர் பம்புகளை 24 மணி நேரத்தில் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Tags

Next Story