மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாமன்ற கூட்டம்!
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடத்தப்படும் என மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார். மேலும் போதை புழக்கத்தை கண்டித்து அதிமுக கவுன்சிலர் ஒருவர் மட்டும் வெளிநடப்பு தூத்துக்குடி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் அதிமுக மாமன்ற உறுப்பினர் மந்திரமூர்த்தி தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உருவாகிய 22 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பிடிக்கப்பட்டுள்ளது மேலும் தூத்துக்குடியில் காவல்துறை உதவியுடன் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தை கண்டித்தும் அதிமுக மாமன்ற உறுப்பினர் வெளிநடப்பு செய்தார்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் புதிதாக மழைநீர் வடிகால்வாய் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் நிறைவேற்றுவது குறித்தும் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் குத்தகைக்கு விடுவது உள்ளிட்ட 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இதைத் தொடர்ந்து பல்வேறு வார்டுகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகள் குறித்து பேசினார்கள் இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு சட்டசபையில் தூத்துக்குடி பகுதியில் நூலகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அதன்படி அந்த நூலகம் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தனசேகர் நகர் பகுதியில் அமைக்கப்பட உள்ளது எனவும் மேலும் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 10 நூலகங்களும் சீரமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார் அது மட்டும் இன்றி மாநகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்களிலும் நூலகங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார் மேலும் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் வருகிற ஜூலை மாதம் முதல் நடத்தப்படும் எனவும் இந்த முகாமில் பொதுமக்கள் வைக்கும் கோரிக்கைகள் உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.