பென்னாத்தூரில் பேரூராட்சி கூட்டம்!

பென்னாத்தூரில் பேரூராட்சி கூட்டம்!

பேரூராட்சி கூட்டம்

பென்னாத்தூர் பேரூராட்சி கூட்டம் தலைவர் பவானி சசிகுமார் தலைமையில் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் பேரூராட்சி கூட்டம் தலைவர் பவானி சசிகுமார் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஜீவசத்தியராஜ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் அர்ச்சுனன் வரவேற்றார். கூட்டத்தில் இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதி திட்டத்தின் கீழ் கணேசபுரம், மேட்டுப்பாளையம் மற்றும் அல்லிவரம் ஆகிய பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சுற்றுச்சுவர் அமைத்தல், அல்லிவரம், சப்தலிபுரத்தில் திறந்தவெளி கிணறு, சுற்றுச்சுவர் மற்றும் மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளுதல்.

மூலதன மானிய திட்டத்தின் கீழ் கன்னடிபாளையம், மேட்டுப்பாளையம் மற்றும் கேசவபுரம் பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், மற்றும் பென்னாத்தூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்வாய் அமைத்தல் பணி மேற்கொள்ளுதல். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் மற்றும் சின்னசப்தலிபுரம் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story