தனி குடிநீர் திட்டம் அமைத்துக் கொடுக்க பேரூராட்சி உறுப்பினர்கள் மனு
நம்பியூர் பேரூராட்சிக்கு தனி குடிநீர் திட்டம் அமைத்துக் கொடுக்க வேண்டும் பேரூராட்சி உறுப்பினர்கள் மனு
நம்பியூர் பேரூராட்சிக்கு தனி குடிநீர் திட்டம் அமைத்துக் கொடுக்க வேண்டும் பேரூராட்சி உறுப்பினர்கள் மனு
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இரண்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நம்பியூர் பேரூராட்சி மற்றும் 18 கிராம குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் பொது மக்களுக்கு குழாய்கள் மூலமாக செய்யப்பட்டு வருகிறது. கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அமைக்கப்பட்ட பிரதான சிமெண்ட் குழாய்கள் பதிந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் குடிநீர் வினியோகம் சீராக செய்ய இயலாது நிலை உள்ளது.பொதுமக்களுக்கு வாரம் ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாக தெரிவித்தனர். நம்பியூர் பேரூராட்சி வளர்ந்து வரும் பகுதியாக உள்ளதால் நம்பியூர் பேரூராட்சிக்கு தனி குடிநீர் திட்டம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமையில் உறுப்பினர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
Tags
Next Story