குடிநீர் திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு

குடிநீர் திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு

குடிநீர் திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு

திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார்.

திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடை பெற்று வரும் ஜல்ஜீவன் திட்டத்தின் குடிநீர் திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் திரு சிவராசு ஐஏஎஸ் அவர்கள் ஆய்வு செய்தார். முதலாவதாக. ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் திருவாரூர் மாவட்ட குடிநீர் ஆதார பணிகள் நடைபெறும் தலைமை இடமான வடுகக்குடி மற்றும் ஆச்சனூர் நீர் சேகரிக்கும் கிணறு அமைந்துள்ள பகுதிகளை பார்வையிட்டார் .பின்பு ஆச்சனூரில் இருந்து கல்லணை ரோடு வழியாக 800 எம்எம் குழாய் பதிக்கும் இடத்தில் குழாய் பதிக்கும் பணிகளை சோதனையிட்டு பணிகளை விரைந்து தரமான முறையில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரம் வழங்க இருக்கும் நீர் சேகரிக்கும் கிணறு அமைந்துள்ள சருக்கை மற்றும் வாழ்க்கை ஆகிய இடங்களில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு திட்ட காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார் மேலும் வாழ்க்கையில் அமைந்துள்ள 25.60 லட்சம் லிட்டர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் நீர்ந்து நிலையம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

பின்பு திருவாரூர் மாவட்ட குடிநீர் பணிகளுக்காக நடைபெறும் நீருந்து தரைமட்ட நீர்தேக்க தொட்டிகள் உள்ள நல்லூர், அம்மையப்பன், ஓகை பேரையூர் ஆகிய இடங்களில் பணிகளை பார்வையிட்டு திட்ட காலத்திற்குள் முன்னதாகவே அனைத்து பணிகளையும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது தஞ்சை வட்ட மேற்பார்வை பொறியாளர் திருமதி வசந்தி ,நிர்வாக பொறியாளர்கள் முருகேசன், சேகர் ராஜேந்திரன், ரவிச்சந்திரன் மற்றும் உதவி நிர்வாக பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், தஞ்சை வட்ட நிலநீர் வல்லுநர் அருள் அமுதன் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story