திருப்பூரில் தேர்தல் பணி குறித்து மாநகர காவல் ஆணையர் ஆலோசனை!

தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக 1500 காவல்துறையினருக்கு வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது குறித்து மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு ஆலோசனை வழங்கினார்.

தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக 1500 காவல்துறையினருக்கு வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது குறித்து மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் ஆலோசனை வழங்கினார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நாளைய தினம் நடைபெற உள்ளது திருப்பூர் மாவட்டத்தில் 1744 வாக்குச்சாவடிகளும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என 43 வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளது இதற்கான பொருட்கள் அனுப்பும் பணி அந்தந்த பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள சிக்கன்னா அரசு கலைக் கல்லூரியில் திருப்பூர் மாநகர காவல் துறையில் இருந்து வாக்குச்சாவடி பணிகளுக்காக செல்லும் காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆனையர் பிரவீன் குமார் அபினவ் இன்று வாக்குச்சாவடிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கி வழி அனுப்பி வைத்தார்.

திருப்பூர் மாநகரில் உள்ள 67 வாக்குச்சாவடிகள் மற்றும் அவிநாசி பல்லடம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் தமிழ்நாட்டைச் 250 ஊர்க்காவல் படையினர் மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த 160 காவலர்கள் 50 முன்னாள் படை வீரர்கள் என மொத்தம் 1500 பேர் பணியாற்றுவதற்காக அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story