தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நகராட்சி தலைவர் நிதியுதவி
நிதியுதவி
குமாரபாளையத்தில் நடந்த தீ விபத்தில் பாதிக்கபட்டோருக்கு நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் நிதியுதவி வழங்கினார்.
குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் ஏரித்தெருவில் மாடியில், சிமெண்ட் அட்டை போடப்பட்ட வீட்டில் வசிப்பவர் ராம்குமார், 45. விசைத்தறி கூலி. நேற்றுமுன்தினம் அதிகாலை 02:00 மணியளவில் திடீரென்று இவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இவரது வீட்டு, துணிமணிகள், பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் தீயில் எரிந்து சேதமாகின. இவர்களுக்கு உதவிடும் வகையில் குமாரபாளையம் வடக்கு தி.மு.க. செயலரும், நகராட்சி தலைவருமான விஜய்கண்ணன் நிவாரண பொருட்கள் வழங்கி, உதவித்தொகை வழங்கினார். அப்போது நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் சுமதி, ஜேம்ஸ், நிர்வாகிகள் விக்னேஷ், கந்தசாமி, ராஜ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
Tags
Next Story