ஆறு மாதமாக நிறுத்தியே வைக்கப்பட்டிருக்கும் நகராட்சி வாகனங்கள் !
செய்யாறு நகராட்சியில் குப்பைகள் சேகரிக்கும் பணிக்காக வாங்கப்பட்ட வாகனங்கள் புதுப்பித்தலுக்காக ஆறு மாதமாக நிறுத்தியே வைக்கப்பட்டுள்ளன.
செய்யாறு நகராட்சியில் குப்பைகள் சேகரிக்கும் பணிக்காக வாங்கப்பட்ட வாகனங்கள் புதுப்பித்தலுக்காக ஆறு மாதமாக நிறுத்தியே வைக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் குப்பைகள் சேகரிக்கும் பணிக்கு நகராட்சி சார்பில் லாரிகள் மற்றும் வேன்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்கப்பட்டு பராமரிப்பு செய்து ஆண்டு புதுப்பித்தல் பணிக்காக நகராட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் சேதமடையும் சூழல் நிலவுகிறது. எனவே விரைவில் பயன்பாடுக்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Next Story