வந்தவாசி தனியார் கல்வி மையம் சார்பில் முப்பெரும் விழா

வந்தவாசி தனியார் கல்வி மையம் சார்பில் முப்பெரும் விழா

முப்பெரும் விழா 

வந்தவாசி தனியார் கல்வி மையம் சார்பில் முப்பெரும் விழாவில் ஏடிஎஸ்பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

வந்தவாசியில் தனியார் கல்வி மையம் சார்பில் நடந்த விழாவில் மாணவர்கள் செல்போனை சரியான முறையில் கையாள வேண்டும் என ஏடிஎஸ்பி விசுவேஸ்வரய்யா பேசினார். வந்தவாசி தனியார் கல்வி மையம் சார்பில், சிந்தனை சிற்பி விருது வழங்குதல், கலை இலக்கிய விழா உட்பட முப்பெரும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு தெள்ளார் வட்டார கல்வி அலுவலர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதர், வந்தை வட்ட கோட்டை தமிழ் சங்க துணை தலைவர் அப்துல்லா, இணை செயலாளர் ஏழுமலை. எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக வடக்கு மண்டல குற்றப்புலனாய்வு உளவுத்துறை ஏடிஎஸ்பி விசுவேசுவரய்யா கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு சிந்தனைச்சிற்பி விருதுகளை வழங்கி பேசுகையில்,

'மாணவர்கள் பெற்றோரை மதித்து நடக்க வேண்டும். இன்றைய சூழலில் அறிவியல் பயன்பாடுகள் குறித்த அறிவைப்பெற முயல வேண்டும். செல்போனை சரியான முறையில் பயன்படுத்தி நமது அறிவை வளர்த்து கொள்ளவேண்டும்.

படிப்புடன் கூடிய தொழிற் கல்வியை பயிலுதல் அவசி யம்' என்றார். இந்நிகழ்ச்சியில் வந்தவாசி டிஎஸ்பி ராஜூ கலை நிகழ்ச்சியில் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Tags

Next Story